Vidhu's kitchen: ஆன்மிகம்

Feed Ad

Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

கூடாரவல்லி உற்சவம்



கூடாரவல்லி உற்சவம்......

திருப்பாவையின் 27வது பாசுரம்..

" கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா *உன் தன்னைப்-
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் "

Akkaravadisal Recipe - Iyengar Style / அக்கார வடிசல் 


 http://www.vidhuskitchen.in/2015/04/akkaravadisal-recipe-iyengar-style.html

குசேலர் தினம் - ஆன்மிகம்

                    



                     மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று குருவாயூர் கோவிலில் குசேலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட குசேலர் வறுமை யில் வாடினார். அப்போது அவர் மனைவி, "உங்கள் நண்பரைப் பார்த்து நம் நிலையைச் சொல்லுங்கள்' என்று, வீட்டிலிருந்த சிறிதளவு அவலை எடுத்து குசேலரின் கிழிந்த அங்கவஸ்திரத்தில் முடிந்து அனுப்பினாள். குசேலர் கொண்டுசென்ற அவலை கண்ணன் உண்டதும், குசேலரின் குடிசை வீடு பெரும் மாளிகையானது என்று புராணம் கூறுகிறது.
                       பகவான் கிருஷ்ணரை குசேலர் சந்தித்தது ஒரு மார்கழி மாதமுதல் புதன்கிழமை. எனவே குருவாயூர் கோவிலில் பக்தர்கள் குருவாயூரப்பனான உன்னிகிருஷ்ணனுக்கு அவல் சமர்ப்பித்து வழிபடுவர். மார்கழி மாத முதல் புதன்கிழமையில் ஸ்ரீகண்ணபிரானுக்கு வீட்டில் அவல் நிவேதனம் செய்து வழிபட் டால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை." 

For Vella Aval Recipe Click Here